Posts

Showing posts from August, 2025

பாதிரியின் பிரார்த்தனை/ மொழிபெயர்ப்பு சிறுகதை/பிரிட்டன்

Image
 பாதிரியாரின் பிரார்த்தனை (பிரிட்டன்) எழுதியவர்: ஹென்றி கார்னெட் ராட்கிளிஃப். தமிழ் மொழிபெயர்ப்பு: வாஞ்சி  பாதிரியார் ரெவரெண்ட் டாம்லின்சன், ஜூலேகாவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். 15 வயது ஜூலேகா அவருக்கு ஒரு தெய்வீக கன்னியாகத் தெரிந்தாள்.  அரேபியர்களிடையே இவ்வளவு அழகான பெண் இருப்பாள் என்று டாம்லின்சன் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. மத்திய கிழக்கில் பயணம் செய்து கொண்டிருந்த டாம்லின்சன், அந்த நேரத்தில் திக்கான் நகரில் தங்கியிருந்தார். அங்கு ஏராளமான இளம் பெண்களும் ஆண்களும் நடனமாடிக்கொண்டிருந்தனர். இருப்பினும், அவர் மற்ற பெண்களையோ அல்லது ஆண்களையோ பார்க்கக்கூட இல்லை. நத்தையின் வயிற்றில் ஒரு முத்து பிறப்பது போல, திக்கான் நகரில் ஜூலைகா பிறந்ததாக அவருக்குத் தோன்றியது.  "அது அந்த நடனப் பெண்களில் ஒருவரா?" டாம்லின்சன் தனக்கு வழிகாட்ட வந்த அரேபியரிடம் கேட்டார். அந்த அரேபியரின் பெயர் தீன். அந்தப் பகுதியைப் பற்றி அவருக்குத் தெரியாதது எதுவுமில்லை. அவர் அனைவரின் குடும்பத்தையும் அறிந்திருந்தார். தம்பதிகளின் ரகசியங்களையும் காதலர்களின் ரகசியங்களையும் அவர் அறிந்திருந்தார்.  ...